Category: தொழில் நுட்பம்

விரைவில் வெளியாகிறது : ‘விகடகவி’ ஆன்லைன் வாரப்பத்திரிகை

Share

தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான்கள் இணைந்து வழங்கும் ‘விகடகவி’ என்ற டிஜிடல் வாரப்பத்திரிகை விரைவில் வெளியாக இருக்கிறது. மதன், ராவ் ஆகியோருடன் விகடகவியின் பங்கேற்பாளர்கள் பங்கு பெற்ற ஆசிரியர் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. நவம்பர் 29-ம் தேதி முதல் வெளியாகவுள்ளது இந்த ஆன்லைன் வாரப்பத்திரிகை. ஆண்ட்ராய்டு, ஐஃபோன்களில் செயலியாகக் கிடைக்கும். விகடகவி குறித்த யூ ட்யூப் விடியோ : https://www.youtube.com/watch?v=4ijKPEluGAg

Share

இலவச செட்டாப் பாக்ஸ் : கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

Share

தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆபரேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச செட்டாப் பாக்ஸ்களுக்கு இணைப்புக் கட்டணமாக ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

Share

பீம் செயலி, எல்.இ.டி பல்புகள், விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி அறிவுரை

Share

பீம் செயலி, எல்.இ.டி பல்புகள், விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி அறிவுரை பீம் செயலி மற்றும் எல்.இ.டி பல்புகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் போது இதனை தெரிவித்தார்.

Share

நீட்டிக்கப்பட்டது ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர்?

Share

கடந்த ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பில் சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரூ. 303-க்கு டாப் அப் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 1 GB டேட்டா, அன்லிமிடட் அழைப்புகள் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்தது. பெரும்பாலானோருக்கு நாளையுடன் அந்த ஆஃபர் முடிவடைய இருந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மேலும் 28 நாட்களுக்கு அதனை நீட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து ஜியோ நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ப்ளானில் ஏப்ரல் […]

Share

வாட்ஸப் : விரைவில் ‘ரீகால்’ வசதி

Share

வாட்ஸப்பில் தவறுதலாக யாருக்கேனும் அனுப்பிவிட்ட தகவல், படங்கள், வீடியோ, ஆவணங்கள் மற்றும் ஜி.ஜ.எப் எனப்படும் நகரும் படங்கள் உள்ளிட்டவையை அடுத்த ஜந்து நிமிடங்களுக்குள் திரும்ப பெற்றுக்கொள்ள ‘ரீகால்’ என்னும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதியானது அடுத்து வெளியாக உள்ள வாட்ஸப்பின் புதிய “2.17.30+” வெர்ஷனில் கிடைக்கப்பெறும். அத்துடன் நாம் அனுப்பிவிட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதியையும் அடுத்தடுத்து வழங்க உள்ளது. ஆனால் இது தற்பொழுது அனுப்பப்படும் புதிய செய்திகளுக்கு மட்டுமே பொருந்தும். பழைய செய்திகளுக்கு […]

Share

நாசா – இஸ்ரோ இணைந்து உருவாக்கும் நிசார் (NISAR) செயற்கைகோள்

Share

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. நாசா -இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கைகோள் மூலம் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம், உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய முடியும். இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த நிசார் செயற்கைகோள் வரும் 2021-ம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. […]

Share

பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி

Share

இந்திய கடற்படை வங்க கடல் பகுதியில் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைத்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

Share

ரிலையன்ஸ் ஜியோ : மேலும் 3 மாதங்களுக்கு இலவசம் தொடரும்

Share

ரிலையன்ஸ் ஜியோ இலவச ஆஃபர்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் இன்றைக்குள் 99 ரூபாய்க்கு புக்கிங் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்து மேலும் குறைந்தபட்சம் ரூ. 303 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இப்போது கிடைத்து வரும் இலவசங்கள் அனைத்தும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். ஜூலை முதல் கட்டணச் சேவை ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Share

நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

Share

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

Share

ரிலையன்ஸ் ஜியோ

Share

மார்ச் 31, 2017-ம் தேதிக்குள் ஜியோ சிம் வாங்குபவர்களுக்கு : 1. 99 ரூபாய் செலுத்தி ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்தால் அதன் பிறகு ஒரு வருடத்திற்கு மாதம் ரூ. 303 செலுத்தி இப்போதுள்ள மாதிரியான சலுகைகளைப் பெறலாம். (தினமும் unlimited டேட்டா – 1 GB வரை FUP limit) 2. ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இணையாதவர்களுக்கு 149 ரூபாயிலிருந்து பல ப்ளான்கள் உள்ளன. 3. மேற்படி ப்ளான்கள் எதாவது ஒன்றில் இணைகிறவர்களுக்கு எந்த நெட்வொர்க்கிற்கு […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme