Category: தேர்தல் 2014

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் – ராகுல் காந்தி

Share

”காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியின் துணைத்தலைவர் என்ற முறையில் நான் முழு பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார். “புதிதாக அமையவுள்ள பாரதிய ஜனதா ஆட்சிக்கு எங்களது வாழ்த்துகள்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Share

திமுக படுதோல்வி. அழகிரி படு மகிழ்ச்சி!

Share

“திமுக 5 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறினேன். அதற்காக நான் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தற்போது 3 சுற்றுகள்தான் எண்ணப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்ட பின்னர் நான் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்” என்று சிரிப்பும், உற்சாகமுமாக கூறினார் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி. ”கருணாநிதிக்குத் தெரியாமல் தான் வேட்பாளர்கள் தேர்வு நடந்தது. நான் இன்னாருக்கு தான் வோட்டு போடுங்கன்னு எல்லாம் சொல்லலை. அவங்கவங்க மனசாட்சிக்கு படி வோட்டு போடுங்க. திமுகவுக்கு மட்டும் போடாதீங்கன்னு சொன்னேன். திமுக தோல்வியடைந்தால் அது […]

Share

மோடி & ஜெ.விற்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

Share

”வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” “பெரும் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாஜிக்கு வாழ்த்துகள்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட்டரில் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்திருக்கிறார்.

Share

திமுக படுதோல்வி : கருணாநிதி அறிக்கை

Share

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து :- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. மக்களின் இந்த முடிவை, “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. “வெற்றி கண்டு […]

Share

தேவையா இது சிரஞ்சீவி?

Share

ஆந்திராவில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலின் வோட்டுப் பதிவின் போது ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் வோட்டுச் சாவடியில் மத்திய அமைச்சரும், ஆந்திர திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி, தனது மனைவி, மகன், மற்றும் மகளுடன் வோட்டுப் போட வந்தார். வந்தவர் அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரையும் தாண்டி நேரே உள்ளே நுழைய முயன்றார். இதைப் பார்த்த வரிசையில் நின்ற கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியைத் தடுத்து நிறுத்தி, “உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? நீங்க மத்திய […]

Share

ஒரு பூரணம் என்று சொல்வார்களே….

Share

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது. கூடவே, ஆலந்தூர் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும். தமிழகத்தில் மொத்தம் 72.83% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 80.99 சதவிகிதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.86 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் 73% வாக்குகள் தான் பதிவாகின. கடந்த தேர்தலை விட இந்த முறை 1.34 கோடி வாக்காளர்கள் அதிகம். ”தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு […]

Share

தமிழகத்தில் வாக்கெடுப்பு தொடங்கியது

Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கெடுப்பு தொடங்கியது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல் நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வாக்கினை பதிவு செய்தார்.

Share

40 தொகுதிகளும் எப்படி? – ஜூனியர் விகடன் கணிப்பு

Share

இன்றைய ஜூவியில் வெளியாகியிருக்கும் ‘நச்’ நிலவரம். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று : (முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கட்சிகள்.. ஜூவி கொடுத்துள்ள வெற்றி வரிசையில்..) திருவள்ளூர் – அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக வடசென்னை – அதிமுக, திமுக, தேமுதிக தென்சென்னை – அதிமுக, பாஜக, திமுக மத்திய சென்னை – திமுக, அதிமுக, தேமுதிக ஸ்ரீபெரும்புதூர் – திமுக, அதிமுக, மதிமுக காஞ்சிபுரம் – அதிமுக, மதிமுக, திமுக அரக்கோணம் – […]

Share

வைகோவுக்கு ஆதரவு – அழகிரி அறிவிப்பு

Share

”விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நண்பர் வைகோவுக்கும் எனக்கும், திமுகவில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  மற்றவர்களைக் காட்டிலும் வைகோ மிகச் சிறந்த மக்கள் சேவகர். மக்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். முல்லை பெரியாறு பிரச்சினைக்காக ஆரம்பம் முதல் குரல் கொடுப்பவர். மதுவிலக்கு கோரி நடைப்பயணம் செய்தவர். தமிழக மக்கள் பிரச்னைக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடியவர். அதற்காக நாம் அவருக்கு பம்பரம் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்” – விருதுநகரில் தனது ஆதரவாளர்களிடையில் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme