Category: அரசியல்

மருத்துவமனையில் ஜெ – விடியோ வெளியிட்டார் வெற்றிவேல் எம்.எல்.ஏ.

Share

மருத்துவமனையில் ஜெ – விடியோ வெளியிட்டார் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு விடியோவை ஊடகங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விடியோவை நீக்கியுள்ளோம்.

Share

மருத்துவமனையில் ஜெ – விடியோ வெளியிட்டார் வெற்றிவேல் எம்.எல்.ஏ.

Share

கடந்த ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெ. சிகிச்சை பெற்ற விடியோவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 20 நொடிகள் கொண்ட அந்த விடியோவில் ஜெ. பழச்சாறு அருந்துவது போல உள்ளது. விடியோ : https://streamable.com/va69c

Share

புதுச்சேரி : கிரண்பேடியின் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது – பேரவை செயலர் அறிவிப்பு

Share

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாரதிய ஜனதாக் கட்சியினரான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் என்ற 3 பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருந்தார். அதனை ஏற்க முடியாது. அந்த நியமனம் செல்லாது என்று பேரவைச் செயலர் வின்சண்ட் ராயர் அறிவித்துள்ளார்.

Share

இரட்டை இலைச் சின்னம் வழக்கு அப்டேட்

Share

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் இறுதி வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எழுத்துப் பூர்வமான வாதங்கள் எதுவும் இருந்தால் இன்றைக்குள் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் / எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போல சசிகலா/தினகரன் அணி சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Share

மெரினாவில் உள்ள தலைவர்கள் சமாதிகளை இடமாற்றக் கோரி வழக்கு

Share

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோர் சமாதிகளை கிண்டி காந்தி மண்டபம் அருகில் மாற்ற வேண்டும். கடற்கரை பாதுகாப்பு மண்டலத்தில் அவை இருக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம் மறுப்பு

Share

தமிழக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விபரங்களை பகிரங்கமாகப் பேசி வருகின்றனர். எனவே அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனோகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பதவி நீக்கம் ஆளுநரின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் தலையிட்டு உத்தரவு […]

Share

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை – எஸ்.வி.சேகர்

Share

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை – எஸ்.வி.சேகர் ’நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல’ என்று பேசி விட்டு பிறகு தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று வழக்கம் போல பல்டி அடித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். அவரது கமெண்ட்டிற்கு பதிலடி தந்துள்ளார் நடிகரும், பாரதிய ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர். “சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதல்ல” என்று பிரகாஷ்ராஜை சுட்டிக்காட்டி ட்விட்டியுள்ளார் அவர்.

Share

நவம்பர் 15 முதல் ஆன்லைன் பத்திரப் பதிவு முறை அமல்

Share

வரும் நவம்பர் 15-ம் தேதி புதன்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை உடனடியாகப் பெற முடியும். ஏற்கனவே சோதனை அடிப்படையில் 154 அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 578 அலுவலகங்களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது.

Share

திமுகவில் ஒட்டுண்ணிகளுக்கு அச்சம் – பொன்.ராதாகிருஷ்ணன்

Share

திமுகவில் ஒட்டுண்ணிகளுக்கு அச்சம் – பொன்.ராதாகிருஷ்ணன் வருமான வரித்துறை நாம் சொல்லி நடவடிக்கை எடுக்காது. அது தனி அமைப்பு. கிடைக்கும் தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்க முடியாது. சுய அதிகாரம் படைத்த அமைப்பு நடத்தும் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்ற மாநிலங்களிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறை கட்சி பாகுபாட்டுடன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவதில் உண்மை இல்லை. வட மாநிலங்களில் பா.ஜ.,வினரின் நிறுவனங்களில் சோதனை நடந்துள்ளது. […]

Share

பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி

Share

ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பன்னாட்டு தலைவர்களை அங்கே அவர் சந்திக்கவுள்ளார். ஆசியான் மாநாட்டைத் தவிர கிழக்காசிய நாடுகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme