Category: இலக்கியம்

பல்லவ மல்லை – பேச்சுக் கச்சேரி

Share

பல்லவ மல்லை – பேச்சுக் கச்சேரி தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் சார்பில், ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 & 25 ( சனி & ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், அண்ணா நினைவு நூலகம் அருகில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. அனுமதி இலவசம்.

Share

விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நினைவு தினம் இன்று…

Share

விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நினைவு தினம் இன்று… இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

Share

ஜெ.விற்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை

Share

ஜெ.விற்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை முன்னாள் முதல்வர் ஜெ.விற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Share

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி காலமானார் #RIP

Share

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி காலமானார் #RIP மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இன்று அதிகாலை 3.30 மணிக்கு  காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ, சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு மிக நெருங்கிய நண்பரான சோ ராமசாமியிடம் ஜெ. மறைந்த தகவல் கடைசி வரை சொல்லப்படவில்லை. வழக்கறிஞர், நடிகர், வசனகர்த்தா, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்று அவர் பல்கலை வித்தகர்.

Share

கவிஞர் இன்குலாப் மறைந்தார்

Share

கவிஞர் இன்குலாப் மறைந்தார் காஞ்சிபுரம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவினால் இன்று சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். எஸ்.கே.சாகுல் ஹமீது என்பது அவருடைய இயற்பெயர். 2006-ம் ஆண்டு அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது. இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து அந்தப் பட்டத்தினை வாங்க மறுத்தார் அவர்.

Share

மதுரையில் மிஷ்கின் நூல் வெளியீட்டு விழா

Share

வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் பேருந்து நிலையம் தல்லாகுளம் பகுதியில் லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் இயக்குனர் மிஷ்கினின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா   சிறப்பு அழைப்பாளர்கள்: ராம் சசி எஸ்.வி.ஆர் பா. ரஞ்சித் செழியன் ஷாஜி பவா செல்லத்துரை தமிழச்சி தங்கபாண்டியன் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஸ்ரீஅனுமதி இலவசம்.  

Share

புதிய தலைமுறை வார இதழ் ஆசிரியராகிறார் உதயசூரியன்

Share

புதிய தலைமுறை வார இதழுக்கு ஆசிரியர் ஆகிறார் எம்.பி. உதயசூரியன். விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் 1990-91ம் ஆண்டில் சிறந்த பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். குங்குமம் உள்ளிட்ட பத்திரிகைகளில் திறம்பட பணியாற்றியவர். வாழ்த்துகள் உதயசூரியன். தற்போதைய ஆசிரியர் மாலன், புதிய தலைமுறையின் கெளரவ ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.

Share

நக்கீரனின் ஓவியத் திருட்டு

Share

தமிழ் ‘தி இந்து’ நாளிதழின் முதன்மை துணை செய்தி ஆசிரியராகப் பணி புரிபவர் ராஜேஷ். சிறந்த ஓவியரும் கூட. அப்துல் கலாம் மறைவை ஒட்டி அவர் ஒரு ஓவியம் வரைந்திருந்தார். தி இந்து நாளிதழிலும் வெளியாகியிருந்தது அந்த ஓவியம். மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த ஓவியத்தை அப்படியே எடுத்து லேட்டஸ்ட் நக்கீரன் வாரமிருமுறை இதழின் அட்டையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியத்தை வரைந்த ராஜேஷின் பெயரோ, அல்லது அந்த ஓவியம் வெளியான தி இந்து பத்திரிகையின் பெயரையோ பயன்படுத்தவில்லை. […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme