Category: சினிமா

எந்த ஆன்மிகவாதியும் குரலை உயர்த்தமாட்டார் – டி.ஆர். குறித்து தன்ஷிகா

Share

’விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அந்தப்படத்தின் ஹீரோயின் தன்ஷிகா தனது பெயரைச் சொல்லவில்லை என்று கூறி அந்த மேடையிலேயே டி. ராஜேந்தர் திட்டித் தீர்த்தார். தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் அவர் விடவில்லை. அது குறித்து இதுவரை வாய் திறக்காத தன்ஷிகா, அந்தப் படத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் பேசுகையில், “”டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்தச் சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு […]

Share

மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு

Share

மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை : ”சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டபோதும், நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நேரடியாக மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனர். ‘’நன்மையைப் பாராட்டுவதிலேயே அனைத்து நன்மையும் அடங்கியிருக்கிறது’ என்பது திபெத் மதகுரு தலாய்லாமாவின் வாக்கு. […]

Share

ஜனவரி 6 : மலேஷியா நட்சத்திரக் கலை விழா – சூப்பர் ஸ்டார் கலந்து கொள்கிறார்

Share

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நட்சத்திரக் கலை விழா நடைபெற உள்ளது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி இது. கூடவே நட்சத்திர கிரிக்கெட்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மலேஷிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் விழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் இந்தக் கலை […]

Share

நடிகர் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Share

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி நடிகர் சிம்பு அதனை விமர்சித்து பாடலொன்றைப் பாடியிருந்தார். அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் விமர்சனமிருந்தது. கபிலன் வைரமுத்து எழுதியிருந்த அந்தப்பாடல் ’தட்றோம்.. தூக்குறோம்’ என்ற படத்திற்காக இயற்றப்பட்டது. பாடலைப் பாடியதற்காக சிம்புவிற்கு பாரதிய ஜனதா தொண்டர்கள் சார்பில் கண்டனங்கள் எழுப்பப்படுவதால் சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

Share

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு

Share

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு தமிழகத்தில் சினிமா கேளிக்கை வரி 30%-லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழிப்படங்களுக்கு 20%. இதைத் தவிர ஜிஎஸ்டி உண்டு.

Share

நடிகர் பீலி சிவம் காலமானார்

Share

நடிகர் பீலி சிவம் காலமானார் பழம்பெரும் திரைப்பட நடிகரும், சின்னத்திரை நடிகருமான பீலி சிவம் காலமானார். 79 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Share

திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் – சூப்பர் ஸ்டார் கடிதம்

Share

திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் – சூப்பர் ஸ்டார் கடிதம் திரைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்ததாவது: எனக்கு பிடிக்காத சில சொற்களில் “வேலைநிறுத்தம்” என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் […]

Share

பயணம் திரைப்படத்திற்கு விருதா? எழுத்தாளர் கொந்தளிப்பு

Share

ராதாமோகன் இயக்கிய பயணம் திரைப்படத்தின் கதை தனது ‘இது இந்தியப் படை’ நாவலுடையது என்று பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஏற்கனவே ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். இயக்குநர் ராதாமோகன் அதனை ஒப்புக் கொண்டு அது குறித்து மீடியாக்களில் பேசுவதாகவும் கூறியிருந்தாராம். ஆனால் பேசவில்லை. இப்போது 2011-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த திரைக்கதைக்கான பரிசு பயணம் படத்திற்காக ராதாமோகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அந்த விருதினை வழங்கக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடியாருக்கு பிகேபி கடிதம் […]

Share

இளைய தளபதி விஜய் பிறந்த நாளுக்காக அங்கப் பிரதட்சணம்

Share

இளைய தளபதி விஜய் பிறந்த நாளுக்காக அங்கப் பிரதட்சணம் குருவாயூர் கிருஷ்ணதாஸை நம் வாசகர்கள் நன்கு அறிவர். (முந்தைய செய்திகள் : https://goo.gl/a8Q8VL https://goo.gl/QeyS4V) இப்போது விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அங்கப்பிரதட்சணம் செய்து வெளியிட்டிருக்கும் விடியோ : ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘நிபுணன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கிருஷ்ணதாஸ்.

Share

‘லூசுப்பசங்க’ – தமிழக அதிகாரிகளைத் தாக்கியவர்களை விளாசிய சின்மயி

Share

தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் அதன் அதிகாரிகள் சிலர் அதிக பால் தரும் கலப்பின பசுக்களை வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றனர். அங்குள்ள ஜெய்சல்மார் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 50 பசுக்கள் மற்றும் கன்றுகளை வாங்கி அதற்க்கு தேவையான அனைத்து தடையில்லா சான்றிதழ் மற்றும் ஆவணங்களையும் முறைப்படி பெற்றனர். பின்னர், அவைகளை 5 லாரிகளில் ஏற்றிக்கொண்டு தமிழகம் திரும்பினர். இந்நிலையில், ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பார்மர் என்ற மாவட்டத்தின் சதார் நகர் அருகே வந்துகொண்டிருந்த […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme