Share

மேட்டூர் அணை : 1.13 லட்சம் கன அடி நீர் வெளியேற்றத்தால் 60 வீடுகளில் நீர் புகுந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.43 லட்சம் கன அடியிலிருந்து 1.33 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.25 லட்சம் கன அடியிலிருந்து 1.13 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் சுமார் 60 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/EFyVE