Share

கேரளா நிலச்சரிவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியுள்ள நிலையில், அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கொல்லம், பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மழை மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்படைந்துள்ளன. இதனால் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இடுக்கி, வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/SagaT