Share

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் பலியாகி உள்ளனர்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேரளாவில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/mrxi9