Share

புதுச்சேரி மற்றும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட தமிழகத்திற்கு வரும் கேரள அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பெரும்பாலான தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/rMH8n