Share

என் கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள் : ரஜினிகாந்த்

திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். கருணாநிதியின் மறைவுக்கு ரஜினிகாந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ”என் கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதுபெரும் தலைவரை இழந்து விட்டோம் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என்றும், தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலில் முத்திரை பதித்தவர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/auYgS