Share

ஜிசாட்-11 செயற்கைக்கோளை நவம்பர் 30-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு

கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6A செயற்கைக்கோள் சில தினங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. இதன் காரணமாகவே ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் நாள் தள்ளிப்போனது. எனவே வரும் நவம்பர் 30-ம் தேதி ஜிசாட் 11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணையதள சேவையின் வேகத்தை அதிகரிக்க இந்த ஜிசாட் 11 செயற்கைக்கோள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/SxFzG