Share

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கதின் பலி எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் லம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிகையை திரும்பப் பெற்றனர். பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த வாரம் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/J5UAo