Share

வைகை அணையின் நீர்மட்டம் 56.89 அடியாக உயர்வு

கடந்த சில ஆண்டுகளாக நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் வைகை ஆறு வறண்டது மட்டுமின்றி, வரலாறு காணாத அளவில் 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 22 அடியாக சரிந்தது. தற்பொழுது முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது எனவே கடந்த ஆண்டு இதே நாளில் 31.10 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு 56.89 அடியாக உயர்ந்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/vTBws