Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த இரண்டு வாரங்களாக டேராடூனில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றிரவு 8.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.

அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கே சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது :

இந்திய அரசியலின் மூத்த தலைவர் மதிப்புக்குரிய டாக்டர் கலைஞரின் உடல்நலம் விசாரிக்க வந்தேன்.

அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி, செல்வம் எல்லாரும் அங்கே இருந்தார்கள்.
 
எல்லோருக்கும் ஆறுதல் சொன்னேன். அதுதான் என்னால் இப்போது செய்ய முடியும்.

டாக்டர் கலைஞர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

Share
The short URL of the present article is: http://seythigal.in/OVeZP