Share

8 நாட்களாக நடைபெற்ற லாரி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

பெட்ரோல், டீசல் மற்றும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 20-ம் தேதி காலை 6 மணி முதல் ஈடுபட்டன. தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உட்பட, நாடு முழுவதும் 85 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 8 நாட்களாக நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Iuhzo