Share

மிஸ்டர் பீன் இறந்ததாக ‘Fox news’ என்ற பெயரில் வதந்தி பரப்பும் இணையதள திருடர்கள்

மிஸ்டர் பீன் தொடரின் மூலமாக உலகப் புகழ்பெற்றவர் ரோவான் அட்கின்சன். இவரை ’மிஸ்டர் பீன்’ என்ற பெயரால்தான் பெரும்பாலானோர் அறிவர். அவர் இறந்துவிட்டதாக பலமுறை வதந்தி பரவியிருக்கிறது. அதேபோல் இன்றும் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் சிலர்.

ஆனால் இது வழக்கமான வதந்தியல்ல, ‘Fox news’ என்ற செய்தி நிறுவனத்தின் பெயரில் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக செய்தியின் இணைப்பை அனுப்புகிறார்கள் அதனை நீங்கள் சொடுக்கினால், அது போலியானதொரு பக்கத்துக்குச் சென்று சென்று உங்கள் கணினி முடக்கப்பட்டதாகக் காட்டும். அதன்பிறகு ஒரு தொடர்பு எண்ணைக் கொடுத்து உங்களை பதிவு செய்யச் சொல்லும், இதன்மூலம் உங்கள் அனைத்து விதமான தகவல்களையும் அபகரித்துக் கொள்ளும். எனவே யாரும் மிஸ்டர் பீன் இறந்ததாக ‘Fox news’ என்ற பெயரில் வதந்தியாக வரும் இணைப்பைச் சொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/hJp9j