Share

பெட்ரோல், டீசல், சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உட்பட, நாடு முழுவதும் 68 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/5JsBD