Share

தமிழில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 196 மதிப்பெண் வழங்க உத்தரவு

தமிழில் எழுதிய நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியலில் 10, வேதியியலில் 6, உயிரியலில் 33 என மொத்தம் 49 வினா, விடைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. எனவே 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/hedub