Share

சிறுமி பலாத்கார வழக்கில் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை உறுதி : சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை போரூரில் ஹாசினி என்ற 6 வயது சிறுமியை, தஷ்வந்த் என்பவன் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை வழங்கியது. இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்திற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/sRtAs