Share

நீதிமன்றங்களின் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் : உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் நீதிமன்ற செயல்பாடுகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்து மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு முக்கியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/5kyjd