Share

ரயில் பயணியின் டுவீட் மூலம், கடத்தி செல்லப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு

கடந்த 05-ம் தேதி முசாபர்புர் – பந்த்ரா அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோரை குறிப்பிட்டு ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டரில், தான் பயணித்துக்கொண்டிருக்கும் எஸ் 5 கோச்சில் பெண் குழந்தைகள் அழுதவாறு உள்ளதாக தகவல் அனுப்பினார். இந்த டுவிட்டர் தகவலை பார்த்த அதிகாரிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினரை தயார்படுத்தி கோரக்பூர் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்த போது விசாரணை நடத்தினர். அப்பொழுது ரயில் பெட்டிகளில் 10 முதல் 14 வயதுள்ள 26 சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்து பின்னர் அவர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுமிகளை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/WCzgT