Share

ஜூலை 15 : தமிழகத்தைப் போல் உத்தரப்பிரதேசத்திலும் பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவைப் போல, வரும் 15-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/CW6pi