Share

மதுரை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

இன்று முதல் 120 நாட்களுக்கு வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,401 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இன்று காலை மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் வைகை அணையை திறந்து வைத்தனர். விநாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/6OJWo