Share

இன்று முதல் ரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2000 அபராதம்

ரயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரயில் நிலைய வளாகம், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/xTV4f