Share

பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை : தமிழகத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் இயங்கும்

நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது பிறை தெரியாததால் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் பள்ளிக்கூடங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/qAvfo