Share

2019 ஜனவரி 01-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் இந்த தடைக்கு பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/c2AXS