Share

எதிர்ப்புகள் ரொம்பக் கம்மியாக இருக்கிறது – ரஜினிகாந்த்

காலா திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்காக நேற்று ஹைதராபாத் சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதை முடித்து விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “காலா திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் ரொம்பக் கம்மியாக இருக்கிறது. இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன்” என்று கூறிவிட்டு தனக்கே உரித்தான அட்டகாசச் சிரிப்பை உதிர்த்தார்.

தூத்துக்குடி சம்பவத்தில் தான் கூறாததைக் கூறியதாக சிலர் திரித்துக் கூறுவது பற்றி அவர் பேசுகையில், “இது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நேரம். எதையும் மறைக்க முடியாது. யூட்யூப் விடியோக்களில் நான் என்ன பேசினேன் என்பது தெரிந்துவிடும்” என்றார்.

“காலா திரைப்பட்த்திற்காகத்தான் தூத்துக்குடிக்குச் சென்றீர்களா?” என்ற கேள்விக்கு, “ஆண்டவன் அருளாலும், என்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆதரவினால் என்னுடைய 43-வது திரையுலக வாழ்க்கையில் அதுவும் இந்த வயதில் நான் அப்படியெல்லாம் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை” என்று சுளீரென பதில் அளித்தார் ரஜினிகாந்த்.

அரசிலையும், சினிமாத்தொழிலையும் சம்பந்தப்படுத்திப்பேசுவது பற்றி, “அப்படித்தான் செய்வார்கள். அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை” என்றார் அவர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/RFqPO