Share

மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை அகற்ற கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த சில மாதங்கள் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு கடைகள் மற்றும் கோவிலின் சில கல் தூண்கள் சேதமடைந்தன. இதனையடுத்து கோவில் வளாக கடைகளை காலி செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/zQuEe