Share

பல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் : ரஜினிகாந்த்

தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் அங்கே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். இந்தத் துயரமான நேரத்திலும் தூத்துக்குடி மக்களிடம் இன்று ரஜினிகாந்திற்கு தன்னிச்சையான வரவேற்பும், ஆரவாரமும், மகிழ்ச்சியும், உற்சாகக் கூக்குரல்களும் கிடைத்தன. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, பல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண நேர்ந்தது. இது தொடர வேண்டும். ஜனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். போராட்டம் கலவரமாக மாறிவிட்டதன் காரணம் சமூக விரோதிகளே எனவே தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் இது தான் நடந்தது எனவே பொது மக்கள் கவனமாக இருக்கவேண்டும். சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வைத்திருந்த மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். எனவே தற்போதைய அரசு அவர் வழியை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் தமிழகத்துக்கு ஆபத்து நேரும் என்று தெரிவித்தார். இதனையடுத்து கலவரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் நிதியுதவி வழங்கினார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/BWy3w