Share

ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி – ரஜினிகாந்த்

தூத்துக்குடி சென்று அங்கே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், நான் முதல் தடவை மக்களை சந்திக்க தூத்துக்குடி செல்கிறேன் ஆனால் அந்த சந்திப்பு கஷ்டமான சூழ்நிலையில் அமைவதால் எனக்கு வருத்தமாக உள்ளது ஆனால் எனக்கு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளையில் அவர்களுக்கும் இது சந்தோஷமாக இருக்கும் என நம்புகிறேன். அரசியலில் ஒருவர் மீது மற்றொருவர் பழி போடுவதும், மாற்றி மாற்றி குறை சொல்வதும் சரியான அரசியல் இல்லை எனவும், இது சிங்க முகம் மாதிரி எப்பயாவது ஒரு முறை மட்டுமே திரும்பி பின்னால் பார்க்கவேண்டுமே தவிர, எப்பவுமே திரும்பி பின்னாலேயே பார்க்கக்கூடாது அப்படி பார்த்தால் அரசியலின் பாதையே மாறிவிடும் என்று தெரிவித்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/hnpWu