Share

தூத்துக்குடிக்கு மீண்டும் இணைய சேவை துவக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இணைய சேவையை துண்டிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலவரத்தில் பாதிக்கப்படாத குமரி, நெல்லையில் இணைய சேவை முடக்கம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் இணைய முடக்கம் தொடரும் எனவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடிக்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ByUhj