Share

தூத்துக்குடியில் இன்று

* தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி கலவரத்தில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சில தனியார் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

* தூத்துக்குடியில் இன்று நடக்கவிருந்த கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வதாக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகம் அறிவித்துள்ளது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வின் மாற்றுத் தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

* தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Bqurf