Share

ஜூன் 01 : திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்

ஜூன் மாதம் 01-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்படும் என்றும் இதற்க்கு முன்னரே ஆயத்தமாக பள்ளிக்கூடத்தில் உள்ள மின் மோட்டார்களை பழுது பார்த்து வைத்துக்கொள்ளுமாறும், பள்ளிக்கூட உட்புற மற்றும் வெளிப்புற இடங்களையும், தண்ணீர் தொட்டி மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்து வைத்து அனைத்து பள்ளிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் 07-ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று வதந்தி கிளம்பியது. இதனையடுத்து ஜூன் மாதம் 01-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ppCCn