Share

பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணித் துணைத் தலைவரான எஸ்.ஜி.சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானதைப் போன்றதொரு பொய்யான தகவலை அவரின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் நான் பதிவிட்டது போல் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த சமூகவலைதளப் பக்கங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையாளர் அவர்களை சந்தித்து புகார் அளித்தது மட்டும் இன்றி சென்னை காவல் துறை ஆணையரிடமும் இது குறித்து தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளேன். https://www.facebook.com/suryahsg மற்றும் https://twitter.com/suryahsg ஆகிய பக்கங்களில் வெளியாகும் கருத்துகள் மட்டுமே என்னுடைய சொந்தக் கருத்துகளாகும். அவற்றுக்கு மட்டுமே நான் பொறுப்பு. என் பெயரைப் பயன்படுத்தி தேசவிரோத சக்திகள் வெளியிடும் போட்டோஷாப் போலித்தகவல்களுக்கு நான் பொறுப்பல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

 

 

Share
The short URL of the present article is: http://seythigal.in/L2fJD