Share

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தொடக்க கால்த்தில் கவிதைகள் எழுதி வந்த அவர், பல்வேறு கதைகள், நாவல்கள் எழுதினார். பின்னர் நடிகர் பாக்கியராஜின், இது நம்ம ஆளு படத்தை இயக்கினார். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். இதனையடுத்து, எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், இலக்கியத் துறையில் தனி முத்திரை பதித்தவர் என்றும் கூறியுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/MbLB5