Share

சற்று முன் : காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணை 16-ம் தேதி ஒத்திவைப்பு

கடந்த 10-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மே மாதம் 14-ம் தேதி (இன்று) காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் உறுதியாக தெரிவித்திருந்தார். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணையை 16-ம் தேதி ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/qInY8