Share

சற்று முன் : உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

கடந்த 10-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மே மாதம் 14-ம் தேதி (இன்று) காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும் கால அவகாசம் கேட்க மாட்டோம் எனவும் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் உறுதியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (14-ம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதன்படி சற்றுமுன் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும், தற்பொழுது விசாரணை நடபெற்றுக்கொண்டிருக்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/pG2E3