Share

வடகொரியாவின் அதிரடி முடிவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

வடகொரியாவின் வடகிழக்கு மாகாணம் மண்ட்டாப் பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அணு குண்டு சோதனை மையத்தையும், அணு சேமிப்பு ரகசிய சுரங்கங்களையும் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் தடம் தெரியாமல் அழித்து விட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளது. தவிர அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளையும் முற்றிலுமாக அகற்றப்படும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/C5oBX