Share

ஜபிஎல் : தகுதி சுற்று மற்றும் இறுதி போட்டிகளின் நேரம் மாற்றம்

ஜபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இரவு 8 மணிக்கு நடந்து வருகிறது. சில போட்டிகளின் இடையே மழை பெய்துவருவதால் போட்டிகள் முடிய கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. இதனால் அரங்கத்திற்க்கு நேரில் வரும் பார்வையாளர்களும், வீட்டில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தூங்க செல்ல கூடுதல் நேரம் எடுக்கிறது. இதனால் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இரவில் நேரம் கழித்து தூங்க செல்வதால் அடுத்த நாள் பணிக்கு செல்ல சிக்கலை சந்திக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல் தகுதி சுற்று, இரண்டாம் தகுதி சுற்று மற்றும் இறுதி போட்டிகளை இரவு 8 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் முன்னாடி 7 மணிக்கு நடத்தப்படும் என்று ஜபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/Sf4py