Share
தேசிய திரைப்பட விருது புறக்கணிப்பு : தபாலில் அனுப்ப மத்திய அரசு முடிவு
 
65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் எப்பவும் ஜனாதிபதி கையால் விருதுகள் பெறுவது தான் மரபாக இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த முறை 11 பேருக்கு மட்டும் ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டது. மீதி கலைஞர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி விருதுகளை வழங்கினார். இந்த மரபை மீறிய காரணத்தால் தேசிய விருது அறிவிக்கப்பட்ட 60 கலைஞர்கள் விழாவை புறக்கணித்தனர். இதனையடுத்து விழாவை புறக்கணித்த கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதக்கமும், சான்றிதழும் தபால் மூலம் அவர்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தகவல் ஒலிபரப்பு துறை அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதி கையால் ஒரு முறை நேரில் விருது வாங்குவது என்பது எங்களுக்கு பெருமை அந்த ஒரு ஆசை கூட நிறைவேறாத ஏமாற்றத்தினாலும், மரபை மீறிய செயலுக்காகவும், விருது வழங்கும் விழாவை புறக்கணித்தோம் என விருதை புறக்கணித்த கலைஞர்கள் தெரிவித்தனர்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/lhRhu