Share
வட கொரிய அதிபருடன் சந்திப்புக்கான தேதி முடிவானது, விரைவில் அறிவிப்பு : டிரம்ப்
 
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சந்தித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
முதலில் வட கொரிய அதிபர், தென் கொரிய தூதரக குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து இரு அதிபர்களும் சந்தித்து பேச தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்பொழுது, வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/8erJz