Share
கொரிய உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீதான தடை தொடரும் : டிரம்ப்
 
வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரியா அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் கொரிய அதிபர்களின் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பகத்தன்மை ஏற்படவில்லை எனவே இந்த வட மற்றும் தென் கொரிய உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீதான தடைகள் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/ykZbE