Share
65 ஆண்டுகளுக்கு பிறகு : வட கொரியா – தென் கொரியா அதிபர்கள் சந்திப்பு
 
வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரியா அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/dUaCg