Share

நிர்மலாதேவி விவகாரம் : தேவாங்கர் கல்லூரியில் இன்று விசாரணை

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தேவாங்கர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வரும் நிர்மலாதேவி, அதே கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளிடம் தவறான பாதையில் வழிநடத்தி செல்ல செல்போனில் பேசியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவிகள் பெற்றோரிடம் பேராசிரியை நிர்மலாதேவி கூறியதை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை நடத்தி மதுரை பல்கலைக்கழகம் பேராசிரியை நிர்மலாதேவியை முதல்கட்ட நடவடிக்கையாக 15 நாட்கள் சஸ்பெண்டு செய்துள்ளனர். இச்சம்பவம் வைரலாக பரவிவரும் நிலையில் அனைத்து தரப்பில் இருந்தும் பேராசிரியை நிர்மலாதேவி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாதேவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பேராசிரியை நிர்மலாதேவி மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தேவாங்கர் கல்லூரியில் விசாரணை குழு தலைவர் சந்தானம் இன்று விசாரணை நடத்த உள்ளார். தேவாங்கர் கல்லூரியில் பழைய மற்றும் புதிய நிர்வாகிகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த அவர், நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் குறித்து மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/kRnLN