Share

ஜூன் 7 – காலா ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஜுன் 7-ம் தேதி வியாழக்கிழமையன்று திரைக்கு வரவிருக்கிறது.

முன்னதாக ஏப்ரல் 27-ம் தேதி காலா திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திரைத்துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டது.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படத்தில், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/1ipzC