Share

புனே ஐபிஎல் : மைதான பராமரிப்புக்கு தண்ணீர் எடுக்க தடை

புனேவில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஜபிஎல் கிரிக்கெட் போட்டியை புனே கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதென்றால், மைதானத்துக்கு எப்படி தண்ணீர் வழக்க முடியும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனையடுத்து, மைதான பராமரிப்புக்காக பவனா அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை மைதான பராமரிப்புக்காக பவனா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/QOf8e