Share

சல்மான் கான் ஜாமின் மனு : இன்று விசாரணை முடிந்தது, நாளை உத்தரவு ஒத்திவைப்பு

1998-ம் ஆண்டு நடந்த பாலிவுட் படப்பிடிப்பின் போது பகாவாத் வனப்பகுதியில் சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் மற்றும் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து. இதன் பிறகு நிபந்தனை ஜாமீனுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன்பிறகு 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதனால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் நடிகர் சயீப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று சல்மான் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளை ஒத்திவைத்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/BidJo