Share

ரஜினி ட்வீட்டுக்கு ஸ்டெர்லைட் பதில்

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று ரஜினிகாந்த் அவரது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் அவர்களது ட்வீட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அளித்த பதில்: எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/l91Ur