எந்த ஆன்மிகவாதியும் குரலை உயர்த்தமாட்டார் – டி.ஆர். குறித்து தன்ஷிகா

Share

’விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அந்தப்படத்தின் ஹீரோயின் தன்ஷிகா தனது பெயரைச் சொல்லவில்லை என்று கூறி அந்த மேடையிலேயே டி. ராஜேந்தர் திட்டித் தீர்த்தார். தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் அவர் விடவில்லை. அது குறித்து இதுவரை வாய் திறக்காத தன்ஷிகா, அந்தப் படத்தின் திறனாய்வுக் கூட்டத்தில் பேசுகையில், “”டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்தச் சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், ’நான் ஒரு ஆன்மிகவாதி’ எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார். எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ,அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்.

அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.

அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/hitM9
Updated: November 13, 2017 — 6:46 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme