மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு

Share

மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை :

”சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டபோதும், நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நேரடியாக மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனர். ‘’நன்மையைப் பாராட்டுவதிலேயே அனைத்து நன்மையும் அடங்கியிருக்கிறது’ என்பது திபெத் மதகுரு தலாய்லாமாவின் வாக்கு.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட பணிகளை மறக்க முடியாது. அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களில், அவர்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். 24 மணி நேரமும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள் சென்னை மாநகரக் காவலர்கள்,

காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டுகள்”

Share
The short URL of the present article is: http://seythigal.in/1yVoM
Updated: November 12, 2017 — 9:07 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme